தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
அறுவடைநாள், பிக்பாக்கெட், இரும்புப்பூக்கள் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் நடிகரான இவர், அதைத் தொடர்ந்து வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரைத்தப்பட்டை என பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இது சாருவோட டேட்டிங் -என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார் ஜி.எம்.குமார்.
இந்த படத்தில் ஜி.எம்.குமார் நடித்துள்ள வேடம் குறித்து அப்படத்தின் டைரக்டர் நாகராஜன் கூறுகையில்,
டேட்டிங் நமது கலாச்சாரத்துக்கு ஒத்து வராத ஒன்று. இலக்கியங்களில் வரும் ஊடலையும் கூடலையும்தான் நான் இன்றைய டேட்டிங்காக நினைக்கிறேன். இப்படி டேட்டிங் போகும் ஒரு ஜோடி சந்திக்கும் பிரச்சினைதான் இந்த படம். இன்றைக்கு க்ரைம் ரேட் கூடுவதற்கு காரணமே இந்த மாதிரி விசயங்கள்தான். கிரிமினல்களும் இங்கு உருவாகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிப்பது, இவர்களை மிரட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது என பல குற்றங்கள் நடக்கிறது. இப்படி லிமிட் தாண்டி போவதால்தான் குற்றம், கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கி றது.
மேலும், இதற்கு முன்பு டேட்டிங் என்பது சிறிய பகுதிகளாக சில படங்களில் வந்திருக்கிறது. ஆனால் டேட்டிங்கை மட்டுமே முழுமையாக வைத்து உருவாகியுள்ள படம் இது சாருவோட டேட்டிங் படம்தான். இது இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் படமாக இருக்கும். இந்த படத்தில் ஜி.எம். குமார் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். டேட்டிங் என்றால் என்ன என்று முதலில் கேட்பவரும் அவர்தான். பின்னர் அதற்கு ஒரு விடை சொல்பவரும் அவர்தான். அந்த வகையில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேடத்தில் அவர் நடித்துள்ளார். அவர் சொல்லும் கருத்து சமுதாயத்தைப் போய் சேரும். அப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திருச்சி செல்லத்துரை கதை திரைக்கதை எழுதி தயாரித்துள்ள இது சாருவோட டேட்டிங் படத்தில் கிரிஷ், ஸ்வப்னா ஆகியோர் ஜோடிகளாக நடித்துள்ளனர்.