வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் மகளாக தன்ஷிகா நடிக்கிறார். ரஜினிகாந்துடன் இப்படத்தில் முதன் முறையாக பலர் நடித்து வருகிறார்கள். அவர்களில் தன்ஷிகாவும் ஒருவர். அதுவும் ரஜினியின் மகளாக அவர் நடிப்பது திரையுலகில் உள்ள பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
'கபாலி' படத்தில் தன்ஷிகா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அது பற்றி, கபாலி முடித்தாயிற்று. மலேசியாவில் என்னுடைய குழுவினரை மிஸ் செய்கிறேன். இயக்குனர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோருக்கு பெரிய நன்றி, ஸ்பெஷல் நன்றி தலைவர் ரஜினிகாந்துக்கு,”என நேற்று அவர் டிவீட் செய்திருந்தார். அந்த டிவீட்டை அவர் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே டிவிட்டர் டிரென்டிங்கில் இடம் பெற்றுவிட்டார். 'கபாலி' படத்தை ரஜினி ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே புரிகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.