Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அழகான சூறாவளி - நடிகை வரலட்சுமி

08 பிப், 2016 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Actress-Varalakshmi-special-interview

'பளீர்' பார்வையால் இளசுகளின் நரம்பை 'சுளீர்' என சுண்டி இழுக்கும் தேவலோக ரம்பை, மயக்கும் மாய அழகால் மர்மமாக நம் மனதை மயக்கிய மாயலோக மங்கை, கம்பீர அசைவுகளால் ஆடாத கால்களையும் ஆட வைக்கும் நடனலோக நங்கை, பூவுக்குள் பூட்டி வைத்த புயலாய் 'போடா போடி'யில் காதலை காதலித்தவர், புல்வெளியில் முட்டி மோதும் முயலாய் 'தாரை தப்பட்டை'யில் மையம் கொண்ட மென்மையான சூறாவளி வரலட்சுமி.

சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக, வரலட்சுமி நம்மிடம் பேசியதில் இருந்து...


*'தாரை தப்பட்டை' வெற்றி எதிர்பார்த்ததா?


இந்தளவு வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. எங்கு போனாலும் 'சூறாவளி' என்கின்றனர்.


* சூறாவளி கதாபாத்திரத்தை எப்படி ஏற்றீர்கள்?


பாலா படம் என்றதும் தயக்கமின்றி ஒப்புக் கொண்டேன். அந்தளவு கதாபாத்திரத்திற்கு ஏற்ப கடினமாக உழைத்தது, இந்தளவு பெயரை பெற்று தந்திருக்கிறது.


* தைரியமான பொண்ணா நீங்கள்?


உண்மையிலேயே நான் தைரியமான பொண்ணுங்க. முதல் படமான 'போடா போடி' கதாபாத்திரம் அதுபோலவே அமைந்தது.


* எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?


எல்லா ரோல்களிலும் நடிக்க வேண்டும் என ஆசை. நடிகைகளின் வேலையும் அதுதானே.


* அப்பா (சரத்குமார்)படம் பார்த்தாரா?


'தாரை தப்பட்டை' பார்த்துட்டு அப்பா பாராட்டினார். அவரிடம் நான் எப்படி நடித்திருக்கிறேன் என நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன்.


* இயக்குனர் பாலா படம் என்ற பயம் இருந்ததா?


பயம் இல்லை. படத்தில் நம்மிடம்(நடிகர்களிடம்) என்ன எதிர்பார்க்கிறார் என்பதை முன் கூட்டியே கூறி விடுவார். அந்த மாதிரி நடித்துவிட்டால் ஓ.கே.,


* படப்பிடிப்பில் செயின் அணிவித்து பாராட்டினாராமே?


படத்தில் வில்லன் சுரேஷ் என்னை தாக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டது. நிஜ கண்ணாடியால் தாக்கும் போது மண்டையில் காயம் ஏற்படுவதை படமெடுத்த கையுடன், என் நடிப்பை பாராட்டிய பாலா சார், உடனே தான் அணிந்திருந்த செயினை அணிவித்து பாராட்டியது மறக்க முடியாதது.


* சசிகுமாருடன் நடித்த அனுபவம்?


சசிகுமார் உதவும் மனம் கொண்டவர். நல்ல டைப்.


* அடுத்த படம்?


பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜூன், பிரசன்னாவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்து வருகிறேன்.


* உங்கள் டான்ஸ் கம்பெனி எப்படியிருக்கிறது?


ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனி மூலம் பரத நாட்டியம், வெஸ்டர்ன், பாலே டான்ஸ் கற்று கொடுத்து வருகிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in