ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகராக அறிமுகமாகி பின் டைரக்டராக மாறிய சோகைல் கான், தனது சகோதரர் சல்மான் கானை வைத்து ஷேர் கான் என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். தற்போது, ஷேர் கான் பற்றிய பேச்சு மீண்டும் பாலிவுட்டில் உலா வர துவங்கி உள்ளது. இப்படத்தின் வேலைகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த செய்தியை சோகைல் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து சோகைல் கான் கூறுகையில், எனது அடுத்த படம் நவாசுதீன் சித்திக் உடன் தான். சல்மான் கானுடன் அல்ல. சரியான சமயத்தில் எனது அடுத்த படங்கள் பற்றி கூறுகிறேன் என்றார். சல்மான் கான் மற்றும் கபில் சர்மாவை வைத்து 2013ம் ஆண்டு ஷேர் கான் படத்தை இயக்க பேசப்பட்டது. படத்தில் கதையில் சல்மான் கானுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்பது உள்ளிட்ட பல காரணங்களால் அப்போது அப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.