ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜி தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அந்த நிகழ்ச்சியை இப்போது நடிகை சுதாசந்திரன் வழங்கி வருகிறார். இந்நிலையில், மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொடரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமானது. பிரச்சினைக்குரியவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு நல்லதொரு அட்வைஸ் கொடுக்கும் அந்த நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாகவும் இருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் நான் படம் இயக்குவதில் பிசியாகிவிட்டபோது அதிலிருந்து விலகினேன். ஆனபோதும், அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு உள்ளது.
ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெற வேண்டும் என்று நான் இதுவரை நினைக்கவில்லை. அதேசமயம், வேறு சேனல்களில் அந்த மாதிரி நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பு கிடைத்தால் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல பதில் வரும் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.