இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடித்தார் திரிஷா. அதையடுத்து மாயா படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்தார். அவர்களைத் தொடர்ந்து சேதுபதி படத்தில் ரம்யா நம்பீசன் அம்மாவாக நடித்துள்ளார். இந்த நிலையில், அடுத்து அனுஷ்காவும் சூர்யாவுடன் நடித்து வரும் எஸ்-3 படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம்.
இதற்கு முன்பு சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் சூர்யாவின் காதலியாகவே நடித்திருந்தார் அனுஷ்கா. அவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். ஆனால் இப்போது எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வரும் சிங்கம்-3 படத்தில் சூர்யா-அனுஷ்காவின் திருமணம் முடிந்து அவர்களுக்கு குழந்தை பிறப்பது போன்று கதை உள்ளதாம். அதன்காரணமாக, திருமணத்திற்கு பிறகு கர்ப்பிணியாகும் வரை ஸ்லிம்மாக நடிக்கும் அனுஷ்கா, அதையடுத்து கர்ப்பிணியாகும்போது உடம்பில் வெயிட் போட்டு நடிக்கிறாராம்.