'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
இ - காமர்ஸ் எனப்படும், இணைய வழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான, ஸ்நாப்டீல் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் மேற்கொண்டிருந்த, விளம்பர தூதர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என, முடிவு செய்துள்ளது.நடிகர் அமீர்கான், ஸ்நாப்டீல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு, விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக, கடந்தாண்டு நவம்பரில், அவர் கருத்து தெரிவித்திருந்தார்; அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அமீர் கானை விளம்பர தூதராக நியமித்திருந்த, ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு, மக்கள் மத்தியில் காணப்பட்ட செல்வாக்கு சரியத் துவங்கியது. இதனால், ஸ்நாப்டீல் விளம்பரங்களில், அமீர் கானின் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டன. ஸ்நாப்டீல் நிறுவனம், அமீர் கானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், இம்மாத இறுதியில் முடிகிறது. அதன்பின், தன் விளம்பர தூதராக, அமீர்கானை மீண்டும் நியமிக்க போவதில்லை என, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.
மத்திய சுற்றுலா துறையின், வியத்தகு இந்தியா பிரசார விளம்பர துாதராக செயல்பட்ட அமீர் கானின் ஒப்பந்த காலம், கடந்த மாதத்துடன் முடிந்தது. ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பாத சுற்றுலாத்துறை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரை, புதிய விளம்பர தூதர்களாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.