பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சென்னை,: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி நடித்து, தயாரித்த, கெத்து படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கெத்து என்பது தமிழ்ச்சொல் இல்லை என தெரிவித்து, வரி விலக்கு சலுகை வழங்க மறுத்து, ஜன., 14ல், தமிழக வணிக வரித்துறை செயலர் அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, உதயநிதியின், ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி துரைசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவுகெத்து என்ற வார்த்தை தமிழ் இல்லை என, படத்தை பார்த்த ஆறு பேர் குழு எந்த ஆதாரமும் இல்லாமல் அறிக்கை கொடுத்துள்ளது. இந்த வார்த்தை, தமிழ் அகராதியில் இடம் பெற்றுள்ளது; அர்த்தமும் கூறப்பட்டுள்ளது. எனவே, கெத்து என்பது தமிழ்ச்சொல் தான். தமிழக வணி வரித்துறை செயலர் இயந்திர தனமாக செயல்பட்டு, வரிச்சலுகை வழங்க மறுத்துள்ளார்.வரிச்சலுகை வழங்க மறுத்து, ஜன., 14ல், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்கிறேன். இப்படம் வெளியான, ஜன., 14 முதல் வரி விலக்கு சலுகை அளிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.