ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாதவன், ரித்திகா சிங் நடித்து சமீபத்தில் வெளியான இறுதிசுற்று படத்தை சுதா இயக்கி இருந்தார். பரவலான பாராட்டுகளை குவித்து வரும் படம் பற்றி இயக்குனர் பாலா கூறியதாவது: விளையாட்டு பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. அவைகள் நல்ல படங்களாக இருந்ததது. இறுதி சுற்று மட்டுமே உணரவைத்த படமாக இருந்தது. நல்ல படம் என்று கேள்விப்பட்டுத்தான் பார்க்கச் சென்றேன். ஆனால் இவ்வளவு நல்ல படம் என்று பிறகுதான் தெரிந்தது. 10 இடங்களில் அழுதேன், 15 இடங்களில் கைதட்டினேன். எனக்கு பாக்சிங் பற்றித் தெரியாது. இந்த படம் எனக்கு பாக்சிங் கற்றுக்கொடுத்திருக்கிறது.
எந்த படம் பார்த்தாலும் குறை கண்டுபிடித்து விடுவேன். என் படங்களில் இன்னும் அதிகமாக கண்டுபிடித்துச் சொல்வேன். ஆனால் குறையே சொல்ல முடியாத பர்பெக்ட் மூவி இறுதிசுற்று. ரித்திகா சிங்கின் நடிப்பு, இயக்குனர் சுதாவின் வார்ப்பு. மாதவனோடு பெஸ்ட் பிலிம் இதுதான். இறுதிசுற்று தமிழ் சினிமாவின் ஆரம்பசுற்று. இந்த டீமிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். இவ்வாறு பாலா கூறியுள்ளார்.