தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன்.. அதன்பின் 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்தாலும், ஏனோ தமிழ்சினிமா அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட, மலையாள திரையுலகம் தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அதுகூட 2008 வரை தான்.. அதன்பின் கடந்த 7 வருடங்களாக தெலுங்கு இந்தி கன்னட படங்களில் மட்டுமே நடித்துவந்த விமலா ராமன் இப்போது மீண்டும் மலையாள சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக..
எட்டு வருடங்களுக்கு முன்பே 'காலேஜ் குமரன்' என்கிற படத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடித்தவர்தான் விமலா ராமன். தற்போது பிரியதர்ஷன் இயக்கவிருக்கும் 'ஒப்பம்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். படத்தின் மையக்கதை இவரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளதாம். இன்னொரு கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க இருக்கிறார். எட்டு வருடம் கழித்து மோகன்லாலுக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்சியாக இருப்பதாக கூறியுள்ளார் விமலா ராமன்.