டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சர்வானந்த நடிப்பில் டோலிவுட்டில் பொங்கலுக்கு வெளிவந்த எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்த பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்டு குறிப்பிடும் படியான வசூலையும் ஈட்டியது. இப்படத்திற்கு பின்னர் சர்வானந்த் நடிக்கும் படத்தை இயக்குனர் மகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரா ரா கிருஷ்ணய்யா படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் மகேஷ் இயக்கத்தி சர்வானந்த் நடிக்கவுள்ள படத்தை மெய்டன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கேசினேனி நானி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.