நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பாகுபலி படத்தில் இடம்பெற்ற அருவிகளை படத்தில் காட்சிப்படுத்தியவிதமும் அவற்றை நீர்மலைகள் என அறிமுகம் செய்து வைத்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கேரளாவில் உள்ல அதே அருவிகளில் பவன் கல்யாண் நடித்துவரும் சர்தார் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில் பவன் கல்யாண் மற்றும் காஜல் அகர்வால் பங்கேற்று வருகின்றனர். சர்தார் படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்கள் எடுத்து காஜல் அகர்வால் அதனை இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நார்த் ஸ்டார் என்டர்டையின்மென்ட் மற்றும் ஈரோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் சர்தார் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடைபெறுகின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.