ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் நிவின்பாலி முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கும் ஆக்ஷன் ஹீரோ பைஜூ படத்தில் நாயகியாக நடித்த அனு இமானுவெல் டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். நிவின் பாலி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் நாயகிகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் இருவரும் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் வாயிலாக டோலிவுட்டிற்கு அறிமுகமாகும் நிலையில், நிவின் பாலி நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்ஷன் ஹீரோ பைஜூ படத்தின் அறிமுக நாயகி அணுவும் தெலுங்கு தேசம் சென்றுள்ளார்.
கோபிசந்த் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தில் அணு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிக்கவுள்ளார். நடிகை ராக்ஷி கண்ணாவும் இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். ஆக்ஷன் திர்லர் வகையைச் சேர்ந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.