Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மணி பட விவகாரம்! லட்சுமிராமகிருஷ்ணன் ஆவேசம்

05 பிப், 2016 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-in-upset

ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து லட்சுமி ராம கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் அம்மணி. 82 வயது அனாதை மூதாட்டிக்கும், 40 வயது பெண்ணுக்குமிடையே உள்ள பாசத்தை மையமாகக்கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு முக்கியமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்புதரப்பில் இருந்து, அம்மணி படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. அதனால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.


ஆனால் இதுபற்றி அப்படத்தின் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணனைக் கேட்டால், அம்மணி படம் சரியில்லை. அதனால் வியாபாரம் ஆகவில்லை என்று அவர்கள் சொல்வது தவறு. காரணம், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே அப்படத்தின் சேனல் உரிமையை 75 லட்சத்துக்கு நான் பேசினேன். ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதையடுத்து அபிராமி குரூப்பில் இருந்து 75 லட்சத்துக்கு படத்தை வாங்கி வெளியிட முன்வந்தனர். அப்போதும் அதற்கு தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை.


அதையடுத்து, புனே, பெங்களூர் உள்ளிட்ட நான்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் அம்மணி படத்தை வெளியிட அழைப்பு வந்தது. ஆனால் அதற்கும் அவர் உடன்படவில்லை. இதற்கெல்லாமே என்னிடம் ப்ரூப் உள்ளது. மேலும்,


எனக்குகூட 1 லட்சம்தான் அட்வான்ஸ் கொடுத்தார். மீதி சம்பளத்தை இன்னும் தரவில்லை. ஆக, அம்மணி படத்தை வாங்க முன்வந்தபோது தயாரிப்பாளர் விற்க முன்வரவில்லை. அதுதான் காரணம்.


இப்போது படம் சரியில்லை. அதனால் வாங்க மறுக்கிறார்கள் என்று சொல்வது நியாயமில்லை. நான் சொல்வதைக் கேட்டிருந்தால் அம்மணி படம் எப்போதோ ரிலீசாகியிருக்கும். அதோடு அம்மணி பட தயாரிப்பாளர் ஒரு பைனான்சியர். அவருக்கு பண விசயத்தில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அதனால்தான் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in