மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ள படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ள இந்த படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பாடல்கள் தாமதமாக வெளியிடப்படுவது ஏன் என்பது பற்றி குறளரசன் அளித்த விளக்கம் வருமாறு:
எனக்கு இசை அமைக்க வாய்ப்பு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. முதல் படமே அண்ணன் படம் என்பது கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்திற்காக நூற்றுக்கணக்கான டியூன்கள் தயார் செய்து அவற்றில் சிறந்தவற்றை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் சற்று தாமதமாகி விட்டது. அதை பொறுத்துக்கொண்ட இயக்குனர் பாண்டிராஜுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் யுவன், ஸ்ருதிஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர், நான் தலா ஒரு பாடல் பாடியுள்ளோம். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.
“இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதில் ஒன்றில் ஆண்ட்ரியா ஆடுகிறார். இன்னொன்று பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. மார்ச் மாதம் படம் வெளிவரும்” என்றார் தயாரிப்பாள் டி.ராஜேந்தர்.