தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் சைத்தான் படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது அதை ஒதுக்கி வைத்து விட்டு எமன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் முதல் படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். அவரே ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்து ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்களை அவரே தயாரித்தார். எமனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இதுவரை நடித்த படங்களுக்காக விஜய் ஆண்டனி தனது உடலில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எமன் படத்துக்காக உடல் எடையை 10 கிலோ வரை கூட்டுகிறார். அதோடு முறுக்கு மீசை அதிகமான தாடி, குட்டையான தலைமுடி என கெட்அப் மாறுகிறார். மக்களை துன்புறுத்தும் வில்லன்களை எமன் வந்து உயிரெடுப்பது வரை காத்திருக்க முடியாது என்பதால் ஹீரோவே அந்த வேலையை பக்குவமா எப்படிச் செய்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.