‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு யு டியூபில் வெளியானது. இந்த டீசரின் வரவுக்காகவே காத்திருந்தது போல விஜய் ரசிகர்கள் டீசரை தெறிக்க விட்டுவிட்டார்கள். 'வேதாளம்' படத்தின் டீசரை விட 24 மணி நேரத்திற்குள் அதிக லைக்குகளைப் பெற்று 'தெறி' டீசர் புதிய சாதனையை படைத்துள்ளது.
'வேதாளம்' டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக 10 மணி நேரத்திற்குள் 79,000 லைக்குகளைப் பெற்றது. ஆனால், 'தெறி' டீசர் அதே 10 மணி நேரத்திற்குள் 1,20,000 லைக்குகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், 'வேதாளம்' டீசர் இதுவரை வாங்கியுள்ள 1,40,000 லைக்குகளை இன்னும் சில மணி நேரத்திற்குள் 'தெறி' டீசர் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்னும் சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தும் 'தெறி' டீசர் மற்றுமொரு சாதனையைப் படைக்கப் போகிறது.
'புலி' படத்தின் பாதிப்பால் துவண்டு போயிருந்த விஜய் ரசிகர்களுக்கு விஜய்யின் ஆக்ஷன், அசத்தலான 'தெறி' டீசர் புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.