தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாரூக்கான். தற்போதைய நடிகர்களில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். ஹீரோவாக மட்டுமல்லாது விளம்பரங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். இந்திய அளவில் ஆண்டுதோறும் அதிகம் வருமானம் பெறும் நபர்களில் ஷாரூக்கான் பெயர் கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்டவருக்கு சின்னதாக ஒரு விமானம் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளதாம். ஆனால் அதை வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்கிறார் ஷாரூக்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது.... எனக்கு விமானம் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அதற்கான பணம் தான் என்னிடம் இல்லை. என்னுடைய எல்லா பணத்தையும் நான் என் சினிமாவில் போட்டுவிட்டேன். என்னுடைய சொந்த விமானத்தில் தனியாக பறக்க ஆசை. இதன்மூலம் இன்னும் நான் அதிகமாக உழைக்க முடியும். ஒருநாள் கண்டிப்பாக எனக்கு போதுமான பணம் இருக்கும். ஆனால் சினிமாவில் முதலீடு செய்ய எனக்கு போதிய பணம் இல்லை. ஒருவேளை நிறைய பணம் கிடைத்து விமானம் வாங்குவீர்களா... அல்லது சினிமா எடுப்பீர்களா...? என்றால் கண்டிப்பாக நான் சினிமாவில் தான் முதலீடு செய்வேன் என்கிறார் ஷாரூக்கான்.