நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டில் இருக்கும் துறுதுறு நடிகை ஆலியா பட். இவர், கெளரி ஷிண்டே இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார், இதில் ஆலியா ஜோடியாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். பொதுவாக ஹீரோவுக்கு ஜோடியாகத்தான் இரண்டு-மூன்று ஹீரோயின்கள் நடிப்பார்கள், ஆனால் இங்கு ஆலியாவுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோக்கள் நடிக்க உள்ளார்கள். ஒருவர் அலி ஜாபர் மற்றுறொருவர் குணால் கபூர். இப்படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கடந்து போகும் காதல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக உள்ளது. படத்தின் கதைப்படி ஆலியா மூன்று ஆண்களை காதலிப்பது போன்று படமாக்கப்பட உள்ளது. ஆகையால் இந்தப்படத்தில் ஹீரோக்களுடன் ஜோடி போட உள்ளார் ஆலியா. இப்படத்தை கரண் ஜோகர் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்தாண்டு இறுதியில் இப்படம் ரிலீஸாக உள்ளது.