Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

04 பிப், 2016 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Shocks-for-Ajith-Fans

அஜித் நடித்த படங்கள் வெளியான தினத்தை நினைவுபடுத்தும்வகையில் ஒவ்வொரு வருடமும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் கடந்த வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் சத்யதேவ் ஐ.பி.எஸ்.ஸாக நடித்திருந்தார் அஜித். அஜித் ரசிகர்கள் என்னை அறிந்தால் வெளியான தினத்தை கொண்டாட்டமாக்காமல் இருக்க மாட்டார்கள்.


அதாவது நாளை ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் என்னை அறிந்தால் படம் வெளியான நாளை நிச்சயமாக டிரெண்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகி இருக்கிறது. என்ன தகவல்?


விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று இரவு 12.01 மணி அளவில் அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை வெளியாகிறது. 'தெறி' படத்தில் விஜயகுமார் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வருகிறார் விஜய். சத்யதேவ் ஐ.பி.எஸ். ஆக அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ஒரு வருட தினத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடும் நேரத்தில், இன்னொருபுறம் விஜயகுமார் ஐ.பி.எஸ். ஆக விஜய் நடித்த தெறி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியாவதால் செம அப்ஸெட்டில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.


அதேசமயம் தெறிக்கு என்னை அறிந்தால் படத்தை டிரண்ட்டுக்கு கொண்டு வரவும் ஆயத்தமாகி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in