‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மீண்டும் ஒரு ரியல் லைப் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு பிருத்விராஜை தேடிவந்துள்ளது... இது பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரோ அல்லது சரித்திர வீரனின் கதையோ அல்ல.. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்த ஷாஜி என்பவரின் உண்மை கதைதான். வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தாரே. அந்த ஷாஜியின் கதைதான்.
இயக்குனர் பிரதீப் எம் நாயர் என்பவர் இந்த ஷாஜியின் வாழ்க்கை வரலாற்றை டீடெய்லாக அலசி, அதில் சினிமாவுக்கான கமர்ஷியல் விஷங்களையும் கோர்த்து அழகான திரைக்கதையாக மாற்றி பிருத்விராஜிடம் சொல்லியிருக்கிறார். பிருத்விராஜுக்கு ரொம்பவே பிடித்துப்போக, இப்போது படத்திற்கு 'விமானம்' என பெயர் வைத்து படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்தப்படத்திற்காக ஒரிஜினல் ஷாஜியையே வரவழைத்து மூன்று குட்டி விமானங்களை தயாரிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார்களாம். ஷாஜி தவிர சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்களாம்.