மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.. சரியாக கடந்த வருடம் மே-29ல் நிவின்பாலி நடித்த 'பிரேமம்', இவிடே' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின.. 'இவிடே' ஒரு வாரம் கூட தியேட்டரில் தங்கவில்லை. 'பிரேமம்' படமோ 250 நாட்களை தொட்டுவிட்டது.. இத்தனை மாத இடைவெளியில் தனது படம் எதையும் ரிலீஸ் செய்யாமல் இந்த வெற்றியை ஆற அமர ருசித்த நிவின்பாலி, சரியாக 251வது நாளில் தனது 'ஆக்சன் ஹீரோ பைஜூ'வை இன்று கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளார்.. நாளை தமிழகம் மற்றும் உலகமெங்கும் இந்தப்படம் வெளியாகிறது.
நீண்ட நாட்கள் கழித்து நிவின்பாலியின் படம் வெளியாவதால் முதல் காட்சியில் இருந்தே கேரளாவின் பல நகரங்களில் தியேட்டர்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அமர்க்களப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நிவின்பாலி முதன்முதலாக போலீசாக நடித்திருப்பதும், '1983' வெற்றிப்பட இயக்குனர் அப்ரிட் ஷைனுடன் மீண்டும் இணைந்திருப்பதும், இந்தப்படத்தை தானே தயாரித்திருப்பதும், கேரளாவில் கடந்த வருடம் அதிர்வை ஏற்படுத்திய 'பிரேமம்' படத்திற்குப்பின் இந்தபடம் வெளியாவதும் என பலவிதங்களில் இந்தப்படம் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது.