‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் 'மதுரை' முத்து. முத்துவின், மதுரை மண் கலந்த பேச்சும், அடுக்கடுக்காக அவரது ஸ்டேண்ட்-அப் காமெடிகளும் பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தற்போது ஒரு தனியார் டிவி.யில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியில் நடித்து வருகிறார் முத்து. இதுதவிர மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது காமெடியால் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்.
முத்துவிற்கு வையம்மாள்(வயது 32) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். வையம்மாள் இன்று காலை, மதுரை தணக்கன்குளத்தில் இருந்து பிள்ளையார்பட்டி கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். கார், திருப்பத்தூரை அடுத்துள்ள கோட்டையிருப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் பஞ்சராகி, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற வையம்மாள் பலியானார்.
நிகழ்ச்சி ஒன்றுக்காக முத்து வெளிநாடு சென்றுள்ளார். மனைவி இறந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.