திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஜீவா நடித்து எந்தவொரு படமும் சமீபத்தில் ஹிட்டாகவில்லை. ஆனால் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான படம் - யான். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. ஜீவா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட யான் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
இந்நிலையில் திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் திருநாள் படம் முடிவடைந்து சில மாதங்களாகின்றன. போதுமான தியேட்டர்கள் கிடைக்காததினால் காத்திருக்கிறது. இதற்கிடையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிக்க ஜீவாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். தற்போது மிருதன் படத்தை தயாரித்துள்ள அவர், அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை தொடங்க உள்ளார். இந்தப்படத்தை காளீஸ்வரன் என்ற புதுகும இயக்குநர் இயக்குகிறார்.