Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் 8 படங்கள்

03 பிப், 2016 - 17:21 IST
எழுத்தின் அளவு:
8-movies-releasing-this-year-for-Vijaysethupathi

குறிப்பிட்ட ஒரு ஹீரோ நடித்த படம் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தால் அவரை மக்கள் மறந்துவிடுவார்கள். அதனால் நீண்டகாலமாக படம் வெளியாகாமல் இருப்பது ஹீரோக்களுக்கு ஆபத்தான விஷயம்தான். நீண்ட இடைவெளி எப்படி ஒரு ஹீரோவுக்கு ஆபத்தான விஷயமோ... அதுபோலவே ஒரு ஹீரோ நடித்த படம் அடிக்கடி வெளியாவதும் ஆபத்தில் முடிந்துவிடும்.

ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த ராமராஜனின் மார்கெட் சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அந்த காலகட்டத்தில் ஒரு நேரத்தில் கையில் 40 படங்கள் வைத்திருந்தார் ராமராஜன். அன்றைக்கு ராமராஜனைப்போல் இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் அதிகப்படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி. அவரது கையில் உள்ள படங்களைப் பார்த்தால் 2016 ஆண்டில் வெளியான படங்களில் அதிக படங்களில் நடித்த கதாநாயகனாக கண்டிப்பாக விஜய் சேதுபதி இருப்பார் என்று இப்போதே உறுதியாக தெரிகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஆரஞ்சு மிட்டாய் நானும் ரவுடிதான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின. இவற்றில் ஆரஞ்சு மிட்டாய் படம் படு தோல்வியடைந்தது. நானும் ரவுடிதான் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2015 ஆம் ஆண்டில் பல்வேறு படங்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் அப்படங்கள் எல்லாம் 2016ல் தான் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டில், விஜய் சேதுபதி நடிப்பில் முதல் வெளியீடாக பிப்ரவரி 12ஆம் தேதி காதலும் கடந்து போகும் படம் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சேதுபதி, இறைவி, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், றெக்க, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவற்றோடு தனுஷ் தயாரிக்கும் புதிய படமும் இந்த ஆண்டே வரவிருப்பதாக தகவல். இவற்றில் ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் தோல்வியடைந்தால் விஜய்சேதுபதியின் நட்சத்திர நாற்காலியை ஆட்டம்காண வைத்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in