மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் தன்னுடைய ஸ்டைலால் அதிகம் பேசப்படும் ஒரு நடிகர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார். ஐந்தே ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவரை விட்டால் வேறு யாரும் தகுதியில்லை என்று அவருடைய ரசிகர்கள் கோபமாகவே சொல்கிறார்கள். ஆனால், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்குப் பலரும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்குவீர்களா என மணிரத்னத்திடம் சமீபத்தில் கேட்டுள்ளார்கள். அதற்கு பதிலளித்த மணிரத்னம், “ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பது மிகவும் கடினம். அவரைப் போல நடிப்பதற்காக ஒருவரைத் தேர்வு செய்து என்பது சாதாரண விஷயமல்ல. அப்படியே ஒருவரைத் தேர்வு செய்தாலும், பொருத்தமாக நடிக்க வைப்பது முடியாத காரியம்,” என்று சொல்லியிருக்கிறார்.
மணிரத்தினம் சொன்னால் அது மிகையாக இருக்காது, அவர் சொல்வதும் உண்மையான ஒன்றுதான்.