Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.ஆர். வீட்டில் அடுத்த அறிமுகம்

03 பிப், 2016 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Another-Debut-from-T.R-Family

தமிழ்த் திரையுலகத்தில் 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரோடு போட்டி போட்டு தனது படங்களையும் வெள்ளி விழா கொண்டாட வைத்தவர் டி.ராஜேந்தர். கிளாமர் இல்லாத, ஆபாசம் இல்லாத குடும்பப் பாங்கான, காதல் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ்த் திரையுலகத்தில் தக்க வைத்துக் கொண்டவர். அவருடைய மனைவியான உஷாவும் திரைப்பட நடிகையாக இருந்தவர்தான். அவர்களின் வாரிசான சிலம்பரசன் குழந்தையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர். தற்போது ஒரு கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

சிலம்பரசனின் தம்பியான குறளரசனும் குழந்தையாக இருந்த போதே சினிமாவில் நடித்தவர்தான். அவரும் கதாநாயகத்தான் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இன்று இப்படத்தின் இசை வெளியாகிறது. நேற்று வெளியான டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறளரசனின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அமைந்திருப்பதாகவே ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இசையமைப்பதோடு படத்தில் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார் குறளரசன். தம்பி இசையமைக்க அண்ணன் அந்தப் பாடல்களுக்கு நடனமாட தமிழ்த் திரையுலகத்தில் மற்றுமொரு அண்ணன், தம்பி கூட்டணி இப்படம் மூலம் உருவாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in