தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலாவின் பிதாமகன் படத்தில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதையடுத்து அமீரின் ராம் படத்தில் நடித்து பிரபலமானார். அப்படி தனது கேரியரை தொடங்கிய கஞ்சா கருப்பு நடித்த எல்லா படங்களிலுமே தாடி வைத்துதான் நடித்து வந்துள்ளார். அவருக்கு அந்த கெட்டப் செட்டாகி விட்டதால் எந்த இயக்குனரும் தாடியை எடுக்கும்படி சொன்னதில்லையாம். ஆனால், தற்போது முதன்முறையாக தர்மதுரை படத்தில் அவர் தாடி இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி கஞ்சா கருப்பு கூறுகையில், நான் பாலாவின் பிதாமகன் படத்திற்கு கமிட்டானபோது என்னை தாடி வைக்கும்படி சொன்னார். அந்த படத்துக்கு அது தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். அதன்பிறகு ராம் படத்திலும் அப்படியே என்னை நடிக்க வைத்தார் அமீர். ஆக அதுவே தொடர்ந்து விட்டது. பின்னர் எனக்கு சான்ஸ் கொடுத்த எந்த இயக்குனரும் தாடியை எடுக்கும்படி சொன்னதில்லை.
ஆனால் சீனுராமசாமிதான் உனது கெட்டப்பை மாற்றப்போகிறேன் என்றார். ஒரு காமெடியனான என்னைப்பார்த்து அவர் அப்படி சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. என்ன கெட்டப்புக்கு சார் மாற்றப்போறீங்க என்று கேட்டபோது, இந்த படத்திலும் காமெடி ரோல்தான், ஆனால் உங்களை தாடி இல்லாமல் காட்டப்போகிறேன் என்றார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. காரணம், தொடர்ந்து தாடியோடு என்னை பார்த்து எனக்கே போரடித்து விட்டது. அதனால் இந்த படத்தில் ரசிகர்களுக்கு புதுசாக தெரிவேன் என்பதால் அதிக உற்சாகத்துடன் இந்த படத்தில் நடித்து வருகிறேன்.
அதோடு, விஜய்சேதுபதியுடன் படம் முழுக்க தொடர்ந்து வரும் கேரக்டர். குறிப்பாக, கிராமத்து வேடத்தில் மதுரை தமிழ் பேசி நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில், கெட்டப் மட்டுமின்றி இந்த படத்தில் வித்தியாசமான பர்பாமென்சும் கொடுத்து வருகிறேன் என்கிறார் கஞ்சா கருப்பு.