ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் அபூர்வமாக சிறந்த படங்கள் வருவதுண்டு. வெறும் விமர்சகர்கள் பாராட்டுவது மட்டும் சிறந்த படமில்லை, படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் ஒரு சேர பாராட்டுவதுதான் சிறந்த படம். அப்படி ஒரு வரவேற்பை இந்தப் படம் பெற்று வருகிறது. சுதா கொங்காரா இயக்கியுள்ள அரசியலால் பழிவாங்கப்பட்ட ஒரு குத்துச் சண்டை பயிற்சியாளர், அவர் பயிற்றுவிக்கும் ஒரு பெண் குத்துச் சண்டை வீரரை, எப்படி வெற்றி பெற வைக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மாதவன் மீண்டும் தமிழில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனைத்து சென்டர்களிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் வெற்றிக்காக நேற்று படக் குழுவினர் கூட நன்றி தெரிவித்தனர். திரையுலகத்தில் உள்ள பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், பிரபல முன்னாள் உலகக் குத்துச் சண்டை சாம்பியனான மைக் டைசன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புவதாக அவருடைய முகப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குத்துச் சண்டையை மையப்படுத்திய ஒரு தமிழ்ப் படத்தை மைக் டைசன் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது படக் குழுவினரை மிகவும் பெருமை கொள்ள வைத்துள்ளது. தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது என அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.