அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீநிவாஸ் இயக்குனர் விவி விநாயக் இயக்கிய அல்லுடு சீனு எனும் படத்தின் வாயிலாக திரை உலகிற்கு அறிமுகமானார். ஸ்ரீநிவாஸ் இயக்குனர் தசரத் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பீடுனொடு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகை தமன்னா, ஸ்ரீநிவாஸுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழிநுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார். ஸ்ரீநிவாஸ் நடித்த அல்லுடு சீனு படத்திலும் விரைவில் வெளிவரவிருக்கும் ஸ்பீடுனொடு படத்திலும் தமன்னா ஒரு பாடலுக்கு ஸ்ரீநிவாஸுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.