அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஆதித்யா 999 படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது படமாக உருவாகவுள்ள அப்படத்தை இயக்குனர் சங்கீதம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளார். டையம் ட்ராவலை மையப்படுத்தி பேண்டசி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் கோன கண்ணா ரெட்டி எனும் வரலாற்று சிறப்புமிகு வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ருத்ரமாதேவி படத்தில் கோன கண்ணா ரெட்டி வேடமேற்று நடித்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மனதில் அக்கதாபாத்திரமாக பதிந்து விட்டார். அந்த அளவிற்கு ஆக்ரோஷமான நடிப்பால் மிரட்டிய அல்லு அர்ஜுனுக்கு பாராட்டுகளும் குவிந்தன.
இந்நிலையில் பாலகிருஷ்ணா, ஆதித்யா 999 படத்தில், ககதிய காலத்திற்கு செல்கையில், கோன கண்ணா ரெட்டி வேடமேற்று நடிக்க இயக்குனர் ஸ்ரீநிவாஸ் அவரிடம் கேட்டுள்ளார். பாலகிருஷ்ணாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். பாலகிருஷ்ணா ஆதித்யா 999 படத்திற்கு பின்னர் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கும் ராமா ராவ் காரு படத்தில் நடிக்கவுள்ளார்.