‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
80களின் நாயகிகளில் முக்கியமான நடிகை ரேவதி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், மோகன், சுரேஷ், சிவகுமார் உட்பட 80களின் நாயகர்கள் பலருடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர். அன்றைய காலகட்டத்தில் ரேவதியைப் போல் குடும்பப் பாங்கான நாயகி எனப் பெயர் எடுக்க வேண்டும் என பலர் போட்டியிட்டனர். ஆனால், ரேவதியைப் போல நடிப்பிலும், அழகிலும் சிறந்த நடிகை என இன்று வரை வேறு யாரும் அவரை மிஞ்ச முடியவில்லை.
ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்களையும் இயக்கியுள்ள ரேவதி இதுவரை தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. முதல் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'குயின்' படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ரேவதிதான் இயக்க உள்ளாராம். இந்தப் படத்திற்கான வசனத்தை சுஹாசினி மணிரத்னம் எழுதப் போகிறாராம். படத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், விரைவில் நாயகிக்கான தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. 'சாகசம்' படத்தை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ள நடிகர் தியாகராஜன் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.