இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் புதிய படம் 'போக்கிரி ராஜா'. ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. படப்பிடிப்பு முடிவடைந்ததும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'போக்கிரி ராஜா'வின் பாடல்களை அடுத்த வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிடிஎஸ் தனியாகப் பிரிந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். போக்கிரி ராஜா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 'காஸ்மோ வில்லேஜ்' நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
'போக்கிரி ராஜா' படத்தை 'காஸ்மோ வில்லேஜ்' பெரிய விலை கொடுத்து வாங்க யார் காரணம் தெரியுமா? படத்தின் ஹீரோவான ஜீவா இல்லை, அப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ள சிபிராஜ்தான். அவருக்காகவே இந்தப் படத்தை வாங்கியுள்ளது காஸ்மோ நிறுவனம். சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை 1 கோடிக்கு வாங்கி 10 கோடி லாபம் பார்த்தது - 'காஸ்மோ வில்லேஜ்'. அந்த அடிப்படையிலேயே போக்கிரி ராஜாவுக்கு பெரியவிலை கொடுத்திருக்கிறார்கள்.