இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் சேதுபதி, தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்புகள் தேனி பகுதியை சுற்றி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சண்டைக்காட்சி படமானபோது சண்டை நடிகர் ஒருவர் விஜய் சேதுபதியின் முகத்தில் குத்துவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சி படமானபோது டைமிங்காக விஜய்சேதுபதி விலக தவறியதால் அவரது கண்ணில் நிஜமான குத்து விழுந்தது. இதனால் கண்ணும், கண்ணை சுற்றியுள்ள பகுதியும் வீங்கி விட்டது.
உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விஜய் சேதுபதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கண் நரம்புகள் வீங்கியிருப்பதாகவும், வீக்கம் குறைய 3 நாட்கள் வரை ஆகும் என்று டாக்டர்கள் கூறினார்கள். 3 நாள் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தால் தயாரிப்பாளர் கடுமையாக பாதிக்கப்படுவார் என்பதால் இயக்குனர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் ஆலோசனை செய்தனர்.
பின்னர் சண்டை காட்சியில் கண் வீக்கத்துடனேயே இருப்பது போலவும், அதற்கு பிறகு வரும் காட்சிகளிலும், கண் வீக்கத்தை கண்டினியூ பண்ணுவது என்றும் முடிவு செய்தனர். இதனால் மறுநாளே கண் வீக்கத்துடனேயே நடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய் சேதுபதி.