‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விசாரணை. ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய லாக்அப் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் போலீசாரால் எந்த அளவிற்க்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்கிற படம். தனது வொண்டர்ஃபார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இணை தயாரிப்பாளாராக இணைந்துள்ளது. அட்டகத்தி தினேஷ், சமுத்திர கனி, கயல் ஆனந்தி கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர்.
படத்தை லைக்காக புரொடக்ஷன் நிறுவனம் வாங்கி வருகிற 5ந் தேதி வெளியிடுகிறது. படத்தை கமலுக்கு போட்டுக் காட்டினார் வெற்றிமாறன். படம் பார்த்த கமல் வெற்றிமாறன் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினார். “நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றி மாறனின் மனதில் பதித்துச் சென்ற பாலுமகேந்திராவுக்கு நன்றி. விசாரணை பார்த்து வியந்தேன்” என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் கமல்.