தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் 'அம்மணி'. இது 40 வயது நடுத்தர பெண்ணுக்கும், 80வயது அநாதை பெண்ணுக்கும் இடையில் பூக்கும் அன்பை பிரதானமாக கொண்ட படம்.
இதன் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களாகிவிட்டது. படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறாராம் தயாரிப்பாளர். படத்திற்கு பேசப்பட்ட பட்ஜெட்டை விட 20 சதவிகிதம் குறைவாக செலவு செய்திருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன், படப்பிடிப்பையும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே முடித்துக் கொடுத்து விட்டாராம்.
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கூட சம்பள பாக்கி வைத்திருக்கிறார்களாம். சம்பள பாக்கியைத் தரவேண்டாம். படத்தை நானே வெளியிட்டுக்கொள்கிறேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டும் படத்தை தயாரிப்பாளர் வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தால்... “படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. படத்தை பார்த்த யாரும் வாங்க முன்வரவில்லை. அதனால்தான் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.