தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போதைய சினிமா நடிகைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர்கள் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த மாதிரி மெச்சூரிட்டியான வேடங்களை தேடுகிறார்கள். அந்த வகையில், நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது அமலாபாலும் சிறு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார். அதேபோல் பீட்சா நாயகி ரம்யா நம்பீசனும் தற்போது சேதுபதி படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித்தான், மூன்றாம் உலகப்போர் படங்களில் நடித்த கன்னட நடிகை அகிலா கிஷோரை சமீபத்தில் ஒரு படத்தில் நான்கு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க கேட்டபோது தடாலடியாக மறுத்து விட்டாராம். நான் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிறுவனுக்கு அம்மாவாக நடித்தால் அடுத்தபடியாக முதிர்ச்சியானஅம்மா வேடத்தில் நடிக்க அழைப்பார்கள். இதனால் எனது கேரியர் வீணாகி விடும் என்று சொல்லி வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டாராம் அகிலா கிஷோர்.