‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த பல ஆண்டுகளாகவே தனி திரையரங்குகள் இடிக்கப்பட்டு புதிய மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமிக்க சாந்தி தியேட்டர்கூட தற்போது மல்டி பிளக்ஸ் சினிமா மாலாக உருவாகி வருகிறது. சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி லக்ஸ், மாஸ் என பல மல்டிபிளக்ஸ் தியேட்டர் மால்கள் உள்ளது.
பிரபல திரைப்பட தயரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர் டெய்ன்மெண்ட் வில்லிவாக்கத்திலும், பழைய மகாபலிபுரம் ரோட்டிலும் மல்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர்களை நடத்தி வருகிறது. தற்போது புதிதா தி.நகர் ஜி.என்.ஷெட்டி ரோட்டில் ஏஜிஎஸ் சினிமா என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை திறந்துள்ளது. இதில் 4 தியேட்டர்கள் அதி நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 1100 இருக் கைகள் கொண்டதாக இவைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மட்டும் 13 தியேட்டர்கள் உள்ளது. இதுதவிர சென்னையில் மேலும் சில இடங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கட்ட ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.