ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் பல போல்ட்டான வேடங்களில் நடித்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவருக்கு மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதுப்பற்றி அவர் கூறியதாவது... என்னை கவர்ந்த பெண்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர், ஏனென்றால் இந்தியாவின் பெருமையை உலகளவில் பேச வைத்தவர். தனது லட்சிய கனவுகளை எட்டியவர். அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து காட்டியவர். அவரிடத்தில் நான் கற்ற விஷயம், நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதன்படி வாழு.... அவர் வாழ்க்கை வெற்றியும், சோகமும் நிறைந்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்று படம் உருவாக இருந்தால் அதில் கண்டிப்பாக நான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.