ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தபு. மெகபூல், சந்தினிபார், ஹைடர், த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான ரோலில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கமர்ஷியல் படங்கள் தவிர்த்து வித்தியாசமான பல படங்களில் நடித்திருக்கிறார் தபு.
இதுபோன்ற படங்களில் நடித்தது பற்றி தபுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... கமர்ஷியல் ரீதியான படங்களை நான் வெறுக்கிறேன். எனக்கு என்ன வருமோ அதை தான் செய்ய வேண்டும், அப்போது தான் மக்களும் ஏற்று கொள்வார்கள். அதேசமயம் ஒரு நடிகையாக நான் எந்த வரைமுறையும் வைத்து கொள்ளவில்லை. கோல்மால் 4 போன்ற காமெடி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என்னாலும் அந்தரோலில் சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
தபு, தற்போது பிட்டூர் படத்தில் கத்ரீனா கைப்பின் அம்மாவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.