'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜா ராணியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் படம் தெறி. இந்த படம் முந்தைய விஜய் படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. அதோடு இந்த படத்தில் மூன்று விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். ஒன்றுக்கொன்று வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு கெட்டப்பில் நடித்த பிறகு இன்னொரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் விஜய். அதனால் இந்த படம் விஜய்யை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்துமாம்.
மேலும், ஹாலிவுட் தொழில் நுட்பம், ஹாலிவுட் நடிகர்கள் என பிரமாண்ட படமாகியிருக்கும் தெறி படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 5-ந்தேதி அப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. அதில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்யின் கெட்டப்புகள் இடம்பெறுகிறதாம். அதனால் தெறி டீசரை இந்திய அளவில் டிரண்ட் செய்ய விஜய் ரசிகர்கள் இப்போதே வரிந்து கட்டி நிற்கின்றனர்.