‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மாமதுரை, சங்கரா, அய்யன் போன்ற படங்களில் நடித்தவர் வாசன் கார்த்திக். இவர் காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் ஆவார். அந்த படங்களுக்குப்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் இப்போது சிங்கமுத்துவே தயாரிப்பாளராகி மகனை வைத்து கட்டழகன் என்ற படத்தை தயாரிக்கப்போகிறாராம். புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் அந்த படத்தில் வாசன் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை யாரையேனும் நடிக்க வைத்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் சிங்கமுத்து.
அந்த வகையில், டாப்பில் இருக்கும் நடிகைகள் கால்சீட் தரமாட்டார்கள் என்பதால் ஹீரோ இமேஜ் பார்க்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகள் சிலரை முடிவு செய்து, இப்போது லட்சுமிமேனனை மகனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் சிங்கமுத்து. பல படங்களில் கதாநாயகியாக நடித்தபோதே வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன், வளர்ந்து வரும் கெளதம் கார்த்திக் போன்ற நடிகர்களுடனும் நடித்து வருவதால், வாசன் கார்த்திக்குடனும் நடிப்பார் என்று அவரிடம் கால்சீட் கேட்கப்போகிறாராம்.
ஒருவேளை, லட்சுமிமேனனின் கால்சீட் கிடைக்கவில்லை என்றால், அடுத்தபடியாக சிவாஜி கேர்ள் ஸ்ரேயா அல்லது இனியாவிடம் கால்சீட் கேட்க திட்டமிட்டுள்ளாராம். காமெடி கலந்த கதையில் தயாராகும் கட்டழகன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறதாம்.