மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா நடித்த அரண்மனை - 2 படம் நேற்று வெளியாகி வர்த்தக ரீதியில் வெற்றியடைந்திருக்கிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்சில் இடம்பெறும் அம்மன் பாடலில் குஷ்பூ நடனமாடியிருக்கிறார். அரண்மைனை - 2 படத்தில் குஷ்பூ நடித்திருப்பதை ரகசியமாகவே வைத்துவிட்டனர். காரணம்.. குஷ்பூதான்.
2011 ஆம் வருடம் இளைஞன் படத்தில் நடித்த குஷ்பூ அதன்பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லை. 2013 ஆம் வருடம் சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் 2015 ஆம் வருடம் வெளியான ஆம்பள படத்திலும் கேமியோ ரோலில் தலைகாட்டினாலும், சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அரண்மனை - 2 படத்தில் இடம்பெற்றுள்ள அம்மன் பாடலைக்கேட்டதும் அதில் தானே நடனம் ஆடுவதாக விருப்பம் தெரிவித்தாராம் குஷ்பூ. மனைவியின் விருப்பத்துக்கு ஓகே சொன்ன சுந்தர்.சி அம்மன் பாடலில் குஷ்பூவை ஆட வைத்திருக்கிறார். இதன் மூலம் குஷ்பூ ரசிகர்களுக்கு அரண்மனை - படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார் சுந்தர்.சி