'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐதராபாத்தில் நடந்த, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் எனப்படும், ஐ.ஐ.எப்.ஏ., விருது வழங்கும் விழாவில், கவர்ச்சி உடை அணிந்து வந்த நடிகை ரெஜினா, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஐதராபாத்தில், சமீபத்தில், ஐ.ஐ.எப்.ஏ., விருது வழங்கும் விழா நடந்தது. இதன் அறிமுக விழாவில், நடிகை தமன்னா கவர்ச்சி ஆடை அணிந்து வந்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதை தொடர்ந்து நடந்த விருது வழங்கும் விழாவில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்த, நடிகை ரெஜினாவும் கலந்து கொண்டார்.
இவர், தமன்னாவையே ஓரம் கட்டும் வகையில், கவர்ச்சி ஆடை அணிந்து வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரெஜினா, அவரின் அழகான புன்னகையால், அடுத்த சினேகா என புகழப்பட்ட நிலையில், படவிழாவிற்கு அரைகுறை ஆடையுடன் வந்து, படவிழாவில் பங்கேற்றவர்களை மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.