ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
நடிகரும், சினிமா இயக்குநருமான விசு, பா.ஜ.வில் தன்னை இணைந்து கொண்டார். மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், கெட்டிமேளம், திருமதி ஒரு வெகுமதி, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் விசு. அதேப்போல் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தான் இயக்கிய படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமா தவிர்த்து நாடகம், பட்டிமன்றம், மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இப்போதும், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 70வயதாகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திரைபிரபலங்கள் பலர் ஒவ்வொரு கட்சியிலும் தங்களை இணைத்து கொள்வார்கள். இந்நிலையில் விசு, தன்னை இன்று(ஜன.30ம் தேதி) பா.ஜ., கட்சியில் இணைந்து கொண்டார். சென்னை கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கடந்த 21 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்றுள்ளேன். இனி பா.ஜ.,வில் என்னை இணைத்துக் கொண்டு மக்களுக்கு வேறுவிதமாக என்னால் முடிந்த நன்மைகளை செய்ய நினைக்கிறேன் என்றார்.