ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அஜித் மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான குடும்ப பொழுபோக்கு திரைப்படமான வீரம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தைப் பார்த்த டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். சர்தார் காபார் சிங் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் குஷி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. வீரம் படத்தை தெலுங்கில் ஸ்ரீமந்துடு படத்தை தயாரித்த மைத்ரி மூவீஸ் தயாரிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கக்கூடும் என தெரிகிறது.