ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நேற்று தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். காலையில் சென்னையில் உள்ள சிறுமலர் பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று மாலையில் தனது அப்பா கமல்ஹாசனுடன் திரையுலக நண்பர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்தார். நிகழ்வில் கமல்ஹாசன் தன்னுடைய மகளுக்கு அன்பான முத்தம் ஒன்றை பரிசளித்தார். அது குறித்து நகைச்சுவை உணர்வுடன் கமல்ஹாசன் அவருடைய டிவிட்டரில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
“இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேருமோ ?,” என தன் மகள் ஸ்ருதியை தோழியாகக் குறிப்பிட்டுள்ளார். முதலில் இதை கமல்ஹாசன் ஆங்கிலத்தில்தான் பதிவிட்டிருந்தார். ஆனால், டிவிட்டர் கணக்கிற்கு வந்தது முதல் கமல்ஹாசன் டிவிட்டரில் ஆங்கிலத்திலேயே பதிவிடுகிறார் என சொல்லியதால், உடனேயே ஆங்கிலப் பதிவை தமிழாக்கம் செய்து பதிவிட்டார். ஆனால், ஆங்கிலத்தில் உள்ள இரண்டு வரிகளை அவர் தமிழாக்கம் செய்யவில்லை. “முத்தம் கொடுப்பதற்காக வழக்கமாக குனிவேன், ஆனால், இப்போது அவர் குனிந்தார், இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேருமோ ?,” என ஆங்கிலத்தை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் விட்டுவிட்டார்.
இனி கமல்ஹாசன் டிவிட்டரில் தமிழையும் அடிக்கடி காணாலாம்...