‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சில நிகழ்வுகள் ஏதேச்சையாக நடப்பது போல இருக்கும்.. ஆனால் நாம் தான் அதைவைத்து சூசகமாக யூகித்துக்கொள்ள வேண்டும்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனியர் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன், மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதுவும் 18 வருடங்கள் கழித்து அவர் படம் இயக்குகிறார் என்பதால் அந்த செய்தியும் பரவலாக பேசப்பட்டது. அதன்பின் பிரதாப் போத்தனே துல்கர் சல்மானை வைத்து தான் படம் இயக்கப்போவதை உறுதி செய்ததோடு, அந்தப்படத்திற்கு அஞ்சலி மேனன் ஸ்கிரிப்ட் எழுதுவதையும், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதையும் தெரிவித்துள்ளார
தற்போது அந்தப்படத்தின் அப்டேட் தகவலாக துல்கருக்கு ஜோடியாக நடிகை தன்ஷிகா நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதாரண வேடங்களில் நடித்த தன்ஷிகா, பேராண்மை, அதை தொடர்ந்து பாலாவின் 'பரதேசி' படங்களுக்குப்பின் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.. தொடர்ந்து இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடித்துவந்த அவர் திடீரென 'கபாலி'யில் ரஜினியின் மகளாக நடிக்க ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து இப்போது மலையாள சினிமாவின் சாக்லேட் பாயான துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்ததின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் என்றே தெரிகிறது.