'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும் நடிகர் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே தமிழை நன்றாக கற்றுக்கொள்வார்கள். முக்கியமாக நடிகர்கள் தமிழில் டப்பிங்கூட பேசுவார்கள். அந்த வகையில், ராமன் தேடிய சீதை படத்தில் தமிழுக்கு வந்தவர் ரம்யா நம்பீசன். அதன்பிறகு ஆட்டநாயகன், இளைஞன், குள்ள நரிக்கூட்டம், பீட்சா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என பல படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு பாண்டியநாடு படத்தில் பை பை பை -என்ற பாடலை பின்னணி பாடியவர் தற்போது மேலும் பல படங்களுக்கு பாடி வருகிறார்.
தற்போது பீட்சாவுக்குப்பிறகு மீண்டும் விஜயசேதுபதியுடன் சேதுபதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆக, தமிழ் சினிமாவுக்கு ரம்யா நம்பீசன் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகி விட்டது. ஆனபோதும் இன்னமும் அவருக்கு சரிவர தமிழ் பேசத் தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலும ஆங்கிலத்தில்தான் பேசுகிறாராம். இந்நிலையில், மலையாள நடிகைகள் சில படங்களில் நடித்ததுமே அழகாக தமிழில் பேசுவதை கோலிவுட் நண்பர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இப்போது தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். அதோடு இன்னும் சில படங்களுக்குப்பிறகு தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்திருக்கிறாராம் அவர்.