ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீவாசங்கர் இயக்கத்தில் 'அமரகாவியம்' படத்தில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ் அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தில் கதாநாயகியாக நடித்தார். 'இன்று நேற்று நாளை' படம் ஓரளவு வெற்றியடைந்தாலும், அமர காவியம் படத்தின் தோல்வி மியா ஜார்ஜுக்கு கரும்புள்ளியாகிவிட்டது. எனவே தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமரகாவியம் படத்தின் இயக்குநரான ஜீவாசங்கர் இயக்கும் படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார் மியா ஜார்ஜ். இப்படத்தில் இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிக்கிறார். விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்த முதல் படமான 'நான்' படத்தை ஜீவாசங்கர் இயக்கியிருந்தார்.
தற்போது ஜீவாசங்கரும், விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்திற்கு 'யமன்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்று ஜீவா சங்கருக்கு கட்டளையிட்டிருக்கிறாராம் விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா.